நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று தம்மை பற்றி கூறிய கருத்துக்கள் தவறானவை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவுசெய்யும் போது ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களுக்காக செயற்படுகிறார் என்று சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை சுயாதீனக் குழுவினர் வேட்பாளராக அறிவித்தபோது அதற்கு ஆதரளிக்குமாறு ரணில் வி்க்ரமசிங்க அனைவரிடமும் கோரியதாக சாணக்கியன் குற்றம் சுமத்தியிருந்தார்.எனினும் இதனை மறுத்த ரணில் விக்கிரமசிங்க, 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்சவினால், ராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு பட்டிருப்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
எனவே மகிந்த ராஜபக்ச சரணம் கச்சாமி, பசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி என்று கூறுவது சிலருக்கு வழக்கமாக இருக்கலாம். எனினும் தாம் ஒருபோதும் ராஜபக்சர்களுக்காக உதவவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய நிகழ்வின்போது சியம்பலாபிட்டியவை வேட்பாளராக அறிவித்தபின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இதன்போது தாம் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை சந்தித்ததை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார். பிரச்சினையை தீர்க்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
எனினும் இந்த பிரச்சினையில் பிளவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டதாக ரணில் குறிப்பிட்டார். இந்தநிலையில் நாளை சனிக்கிழமை தமது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க சபையில் முறையிட்டார்.
Be First to Comment