தன்னைச் சந்திக்க விரும்பினால் திங்கட்கிழமை சிறிகொத்தவிற்கு வந்து சந்திக்கலாம் என்று, தனது வீட்டுக்கு முன்பாக இன்று (7) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி அவருடைய வீட்டுக்கு முன்பாக இன்று அதிகாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தாய் நாடுகளுக்கான தாய்மார்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘சாத்தான்களுடன் டீலில் ஈடுபடுபவர்’, ‘ரணில் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’, ‘ரணில் நீங்கள் அரசியல் தந்திரி’, ‘வஞ்சகர்கள் கூட்டம் ஒன்றிணைந்துள்ளது’, ‘ரணில் நீங்கள் வீட்டில் இருங்கள்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Be First to Comment