கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிர்வாண படங்களை முகப்புத்தகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதி விடுவோம் என மிரட்டி 2 லட்சம் ரூபா பணம் பறித்த கணவன் மனைவி உட்பட நால்வர்கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மனைவியின் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து ,சாவகச்சேரி பகுதியை ஒருவரை முகப்புத்தக நட்பு வட்டத்துக்குள் இணைத்து பெண்கள் போல் பாசாங்கு செய்து அவரை கோப்பாய் பகுதிக்கு அழைத்து கணவன் மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இணைந்து குறித்த நபரை அறையில் பூட்டி நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த பின் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை முகப்புத்தகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி தமக்கு இரண்டு லட்சம் ரூபா பணம் வழங்குமாறு கோரிய நிலையில் சாவகச்சேரி இளைஞன் உடனடியாக 2 லட்சம் ரூபா பணம்வங்கியில் வைப்பிலலிட்டு ள்ளார்
எனினும் மேலதிகமாக வங்கியில் 5லட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடுமாறு மிரட்டியபோது சாவகச்சேரி நபர் கோப்பாய் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்ததற்கு இணங்க இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் நிர்வாண படங்களை முகப்புத்தகத்தில் பதிவு செய்வதாக மிரட்டி பணம் பறித்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் செல்வபுரத்தை சேர்ந்தவர்கள் எனவும் பாற்பண்ணை பகுதியில்தற்போது வசித்து வருவதாகவும்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறிப்பிட்ட காலம் ராணுவத்தில், இணைந்து பணியாற்றி பின் விலகியவர் என கோப்பாய் பொலிஸ் நிலையதகவல்கள் தெரிவிக்கின்றன.
Be First to Comment