தற்போது நாட்டுக்கு முறைமை மாற்றமொன்றே அவசியப்படுகின்றது. சிங்கப்பூர், தென்கொரியா போன்று ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் இன்று இரண்டுவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இவற்றுக்கு மேலாக அரசியல் பிரச்சினை காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
எமது கைகளில் தற்போது டொலர் இல்லை. 20 மில்லியன் டொலர்கூட கையிருப்பில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மறுபக்கத்தில் ரூபாய் இல்லை. வரி குறைப்பு காரணமாக 800 பில்லியன் ரூபாய் இல்லாமல் போயுள்ளது.
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது.
அந்நிய செலாவணி இல்லாததன் காரணமாக வியாபாரத் துறை பாதிப்படைந்துள்ளது.
வேலையில்லாத பிரச்சினை ஏற்படும். மறுபக்கத்தில் பணவீக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தியத்தர வர்க்கத்தினர் அடிமட்டத்துக்கு செல்வர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment