இலங்கை சட்டக்கல்லூரி நிர்வாகம் நாளை (09) முதல் தன்னிச்சையான முறையில் பரீட்சைகளை நடத்தவுள்ளதாக இலங்கை சட்ட மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளை பிற்போடுமாறு பெரும்பாலான மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 4,000 பரீட்சார்த்திகள் கலந்துகொள்ளும் இந்த சட்டப் பரீட்சை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மூன்று நிலையங்களில் நடைபெறவுள்ளதாக இலங்கை சட்ட மாணவர் சங்கம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென சட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Be First to Comment