நாளை (09) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
Be First to Comment