நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு, ஏகாதிபத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என்றும் எனவே அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், கொழும்பில் இன்று (8) நடைபெற்றது. சந்திப்பின் முடிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 220 இலட்சம் மக்களும் இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் மக்களின் துயரை துடைப்பதற்காக எந்த தியாகங்களையும் செய்வதற்கு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment