வல்வெட்டித்துறையை பொலிஸ் நிலையத்தில் மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன் மற்றும் மகன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் கணவனால் தகராறு ஏற்படுவதாக மனைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் வீட்டிலிருந்து வாள் மற்றும் கத்தியை மீட்டுள்ள பொலிஸார். சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Be First to Comment