அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடல் போராட்டத் தளங்களில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
மேற்படி இரு போராட்டத்தளங்களில் அரசாங்க ஆதரவு தரப்பினருக்கும், அரசாங்கத்தை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையில் மோதலொன்று இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை முன்னெடுத்தனர்.
எனினும், காலி முகத்திடலில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையிலான இராணுவத்தினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Be First to Comment