முப்படையினரினது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கும் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களினதும் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, விடுமுறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைக்கு சமுகமளிக்குமாறு காவல்துறைமா அதிபர் கோரியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பொதுமக்களின் ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் பொது பாதுகாப்பிற்காக காவல்துறையினருக்கு உதவ முப்படையினரும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment