நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வாகனமொன்றில் வந்த சிலர் இவ்வாறு, நகரின் நிட்டம்புவ நகர மத்தியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Be First to Comment