ராஜபக்ஷக்களின் பெற்றோர்களான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் நினைவாக மெதமுலனவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று (09) முற்பகல் முழுவதும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் பல வீடுகள் தாக்கப்பட்டதுடன், சில வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதற்கு சுமார் 33.9 மில்லியன் ரூபா பொது நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment