இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் உடனிருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் ஆதரவை வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்
Be First to Comment