மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து காவல்துறையினர் அவரை மீட்டு பாதுகாப்பாக, அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை கட்டுப்படுத்த சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Be First to Comment