மொட்டுக் கட்சியின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான அநுராதபுரத்திலுள்ள ஞானக்காவின் வீடு, தேவாலயம், ஹோட்டல் என்பன இன்று (10) முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்களால் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டின் முன் எதிர்ப்பாளர்கள் நெருங்கும் அபாயம் காரணமாக கிட்டத்தட்ட 200 இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று அதிகாலை 1 மணியளவில் ஞானக்காவின் வீட்டை தாக்குதலுக்குள்ளானது. அங்கு படையினர் முதலில் வீட்டைப் பாதுகாக்க முயன்றனர். ஆனால் பின்னர் ஞானக்காவின் வீட்டைச் சுற்றியுள்ள சுவர் உடைக்கப்பட்டதால் அவர்கள் விலகி நின்றனர்.
பின்னர் போராட்டக்காரர்கள் ஞானக்காவின் உடைமைகளில் சிலவற்றை கிராம மக்களுக்கு விநியோகித்ததுடன் வீட்டிற்கு தீ வைத்து எரித்தனர்.
அதன்பின்னர் ஞானக்காவின் தேவாலயம் தாக்கப்பட்டது.
இறுதியில், நவநுவர வீதியிலுள்ள ஞானக்காவின் ஹோட்டலை முற்றுகையிட்ட போராட்டக் காரர்கள், அங்கிருந்த அனைத்து சொத்துக்க ளையும் அழித்து, தீயிட்டு எரித்தனர்.
எனினும், வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதையடுத்து, ஞானக்காவின் வீட்டை விட்டு பாதுகாப்பு படையினர் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது.
Be First to Comment