முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறினார்.
முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எதிர்ப்பாளர்கள் கடற்படைத் தளத்தில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment