வன்முறையால் நாடு அழிவையே அடைவாகப் பெறும் எனவும், பல தசாப்தங்களாக நாடு இத்தகைய அழிவை அனுபவித்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனவே இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் எனவும் ஜனநாயகத்துக்காக போராடும் இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ச ஆட்சியிலுள்ள எவருக்கும் எவ்வகையிலும் தப்பிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Be First to Comment