இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்காளிகளின் இலக்குகளை அடைந்து கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உடனடி பொருளாதார மீட்சியின் பாதையில் இவை தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை கவலையளிப்பதாகவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment