விசேடமாக இன்று (11) இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை காவல்துறை எச்சரிக்கிறது.
அதேவேளை, கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment