இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானிக்க முடிவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள் எனவும், இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment