ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.
இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் அராஜக நிலையை போக்குவதற்கு கட்சி என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கட்சித் தலைவரிடம் யோசனை தெரிவித்துள்ளனர்.
எனினும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இதேவேளை, இந்த காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியை விட்டு விலகுவதாக கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
Be First to Comment