தம்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த விரும்பினால், தாம் காலிமுகத்திடலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் பெற்றோரின் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற குழுவினர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்
இந்தநிலையில் குறித்த வீட்டில் தாம், தங்குவதில்லை என்றும், தனது பெற்றோர் மற்றும் சகோதரி மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகவும் இராஜ் தெரிவித்துள்ளார்.
தந்தை அறையொன்றில் இருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்ற போது அவரது தாயும் சகோதரியும் வெளியில் இருந்ததாக வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோர் அரசியலில் ஈடுபடாதவர்கள் என்றும், அவர்கள், தமது சொந்தப் பணத்தில் கட்டிய வீடு இது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு தம்முடன் பிரச்சினை இருந்தால் தம்மை தாக்கியிருக்கலாம்
இந்தநிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மைத் தாக்க விரும்பினால், காலி முகத்திடலுக்குச் செல்லத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்
கொழும்பில் இருந்து தப்பிச்சென்றுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளராக இராஜ் அனைவராலும் பார்க்கப்படுவதன் காரணமாகவே அவரது பெற்றோரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Be First to Comment