களனி – கொள்ளுவத்தை – பிலப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
நேற்றிரவு குறித்த நபர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் நுழைந்த நபரொருவருர் இந்தக் கொலையை மேற்கொண்டதுடன், அங்கிருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் 69 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, களனி வலயத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியடசகரின் கீழான குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நித்திரையில் இருந்த வர்த்தகர் கொலை: உடைமைகள் கொள்ளை!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment