நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாதது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிலையான ஆட்சி முறைமையும், அரசாங்கமும் கூடிய விரைவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
225 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பு இதுவாகும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பேணக்கூடிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பது மிகவும் அவசியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் இவ்வாறான ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டால் நாடு பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநிலை தொடர்ந்து சில நாட்களுக்கு நீடித்தால், 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் கூறினார்.
இதேவேளை அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரத்திற்கு நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் மாற்றம் ஏற்படவில்லை எனின் தான் பதவி விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Be First to Comment