மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பை துண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
“மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பை துண்டிக்கும் எண்ணம் எப்பொழுதும் எமக்கு இருந்ததில்லை. நாம் அனைவரும் வெளியேறினால் நிச்சயமாக மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் அத்தகைய செயலை நாம் செய்யப்போவதில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் மின்சாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் எவராலும் ஃபோன் ஒன்றை சார்ஜ் செய்யவோ, பேசவோ, எதையும் செய்யவோ முடியாது போகும். அதனால்தான், எக்காரணம் கொண்டும் மின்வெட்டை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறுகிறோம்.”
Be First to Comment