Press "Enter" to skip to content

மஹிந்த தங்கவைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான தகவலை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை கப்பற்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் அவர் தங்கியிருந்த வேளையில், அதனை 1000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் சுற்றிவளைத்திருந்தனர்.

அவரது பாதுகாப்புக்கு அங்கு அச்சுறுத்தல் நிலவியதால், அவர் திருகோணமலை கடற்படை கப்பற்துறைக்கு மாற்றப்பட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை சீரான பின் அவர் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு பிரஜையாயினும், அவர் தலைவராக இருப்பினும் சரி சாதாரண குடிமகனாக இருப்பினும் சரி அனைவரையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *