பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.





Be First to Comment