சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் வீட்டை ஒரு குழுவினர் தாக்க வந்த போது, கிராம மக்கள் அவரது வீட்டை பாதுகாத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமவில் உள்ள வீட்டை தாக்குதவற்கு நேற்று முன்தினம் ஒரு குழுவினர் அணிதிரண்டு வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த, கிராம மக்கள் ஒன்று திரண்டு, லலித் எல்லாவலவின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்தனர்.
இதன்போது சுமார் 300இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்வாறு ஒன்றுகூடியுள்ளனர். மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொல்லுகளுடன் தாக்குதல் நடந்த வந்த குழுவினர்,பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றுள்ளனர்.
அத்துட்ன் கிராம மக்களும் மற்றவர்களும் எம். பியின் வீட்டின் அருகே இரவு வரை தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லலித் எல்லாவல பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் ஆவார்.
Be First to Comment