வெற்றிலைக்கேணி பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியே கணவனை கொலை செய்து புதைத்தமை விசாரணைகளில் தொியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் கூறியுள்ளனர்.
வெற்றிலைக்கேணி – முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் இன்று வெளியாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமையினை கண்டறிந்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment