கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறைப் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் 3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டார்.
அதே வேளை காணாமல் இரு மாணவர்களின் சடலங்கள் மறுநாள் புதன்கிழமை(11) மாலை மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 18 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனா்.
கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடலில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை மாணவர்களான முகமது பைரூஸ் வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை காவல்துறையினா் ர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Be First to Comment