தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஓமல்பே சோபித தேரருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இன்று மாலை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதிவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பொது மக்களின் உண்மையான அபிப்பிராயம் தொடர்பான கரிசனைகள் இல்லாமலும், ரணில் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ஆகியோர் தீர்மானம் எடுத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் எப்போதும், ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் ஒருவர். கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களும் ரணிலை பாதுகாத்துள்ளனர்.
எனவே, இந்த இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கிறார்களே தவிர, பொதுமக்களின் அபிப்பிராயத்தை கருத்திற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைக்கு துளியளவும் கூட, செவிசாய்காமல் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த இருவரிலும் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றார்.
Be First to Comment