பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாட்டில் சட்டவிரோத கும்பல், வன்முறைக் குழுக்கள் மற்றும் பொது / தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக பின்வரும் இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் 076 7393977, 011 2441146 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற அவசர தொலைக்பேசி இலக்கத்துக்கு அழைத்து இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Be First to Comment