ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (14) தீர்மானித்திருந்தது.
பின்னர், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்சவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழுவிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
91 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில், எஞ்சியவர்கள் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காரசாரமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ்மா அதிபர் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Be First to Comment