கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 9ஆம் திகதி தனியார் பஸ்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பு பேர வாவிக்கு அறுகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் கார்கள் லொறிகள் உள்ளடங்களாக சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நிறுத்தப்பட்டடுள்ள வாகனங்களில் பல வாகனங்கள் மீள்புதுப்பிக்க முடியாதளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அலரிமாளிகையில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்துக்கு வாடகை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பஸ்களில் சுமார் 40 பஸ்கள் மீள் புதுப்பிக்க முடியாத அளவில் தீக்கிரையாக்க்பபட்டுள்ளதுடன் பஸ்களின் உதிரிப்பாகங்களும் திருடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இனி தனியார் பஸ்களை வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment