வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் செயற்பாட்டாளர் ஒருவர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment