காற்றினால் பனை முறிந்து
மின்சாரம் தடைப்பட்டது!
-இரு மின்கம்பங்களும் சேதம்-
பொன்னாலையில் இன்று வீசிய கடும் காற்றினால் பனைமரம் ஒன்று முறிந்து மின் வடத்திற்கு மேல் வீழ்ந்ததால் மின்சார் வயர்கள் அறுந்ததுடன் இரு மின் கம்பங்களும் சேதடைந்தன. இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலைக்கு முன்பாக, ஆட்களற்ற வெற்றுக் காணிக்குள் நின்ற பனை மரம் ஒன்று காற்றினால் வீதியை நோக்கி பாறி வீழ்ந்தது. இதன்போது மின் வடம் மற்றும் சிறிலங்கா ரெலிகொம் இணைப்பு வயர்களுக்கு மேல் பனை வீழ்ந்ததால் வயர்கள் அறுந்தன.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சில மணி நேரங்களில் மின்சார விநியோகம் சீர்செய்யப்பட்டது. எனினும், ஒரு வீட்டிற்கு மட்டும் இணைப்பு வழங்கப்படவில்லை. சேதமடைந்த மின் கம்பங்களும் மீளமைக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Be First to Comment