இலங்கையில் தாக்குதலை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் ஒன்றிணைகின்றனர் என புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களிற்கு புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment