முதுகெலும்பில்லாத இந்திய அரசின் அடிவருடிகளான சிலதமிழ் கட்சிகள் விழுந்துவிழுந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களை வரவேற்று மக்களுக்கு உண்மையைச் சொல்லாது கோத்தபாயவை எதிர்க்கின்றோம் என பொய் கூறி மலசலம் கூடம் செல்வதற்கு கூட கோட்டபாயவிடம் கேட்டு செல்லும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுமுற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்திய அரசின் எடுபிடிகளாக செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுகின்றது அதேபோல ஒரு தரப்பு எங்களை தோற்கடிப்பதற்காக தாங்கள் ஒரு தேசியவாதி என நடிக்கிறவர் அமைச்சர் பதவிகளையும் ஏற்பதாக அறிவித்திருக்கின்றார்
சுமந்திரன் கொஞ்சம் நாசூக்காக அரசாங்கத்துடன் இணை மாட்டோம் ஆனால் தவிசாளர் பதவியினை ஏற்பதாகவும் எனக் கூறியிருந்தார்
ஆனால் அதையும் தாண்டி பெரும் தேசியவாதியாக பொட்டுதாடி ஐயா காட்டுகின்ற விக்னேஸ்வரன் ஐயாதான் அமைச்சர் பதவி ஏற்கதும் தயாராக உள்ளதாக.எனவேதமிழ் மக்கள் ஒன்றினை விளங்கிக் கொள்ள வேண்டும் எமது இனப் படுகொலைகளை மேற்கொண்ட ராஜபக்ச தன்னுடைய ஆட்சி தன்னுடைய குடும்ப ஆட்சி தன்னுடைய தரப்பை பாதுகாப்பதற்கு மேற்கிற்கும் இந்தியாவுக்கும் சரணடைந்து இருக்கின்ற இந்த நிலையில் இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க நியமனம் அந்த நியமனத்தை வைத்து மேற்கும் இந்தியாவும் விரும்பின வகையிலே தமிழ் அரசியல் கட்சிகள் என்று சொல்லக்கூடிய தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமது கட்சிகளும் கூட இன்றைய தினம் இனப்படுகொலையாளியின் ஆட்சிக்குமுண்டு கொடுக்கப் போகின்றார்கள். போன முறை கூட இவ்வாறு காப்பாற்றினர் அதேபோல இந்த முறை கோத்தபாய முதுகெலும்பில்லாத தமிழ் கட்சியுடன் இணைந்து மீண்டும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட நீதியை கோரி போராடுகின்ற தமிழ் மக்களுக்கு முகத்தில் அறையும் வகையில் அந்த தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்ற தமிழ் கட்சிகள் இன்றைக்கும் செயற்படுகின்றன
Be First to Comment