எரிவாயுவுடன் இன்று காலை ஒரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இதேசமயம், இந்த வாரம் மற்றொரு எரிவாயு கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.
இன்றைய தினம் கப்பல் வந்ததும் உடனடியாக இறக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம், மற்றைய கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி – வியாழக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அறிய வருகின்றது.
அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தி வருகின்றார். இந்த நிதி கிடைத்ததும் 3 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்து சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Be First to Comment