முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம் சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் அநுராதபுரத்தில் உள்ள இல்லங்களுக்கு தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரர் உள்ளிட்ட 13 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், அநுராதபுர நீதிவானிடம் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கைதானவர்களில் சிலர் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும், ஏனையோர் 23 மற்றும் 24 ஆம் திகதிகள் வரையிலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Be First to Comment