நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை கொழும்பின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஆயிரம் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைக்கப்பட்ட பொலிஸார் இன்று கொழும்பை வந்தடைவர். அவர்கள் தம்முடன், தேசிய மற்றும் பொலிஸ் அடையாள அட்டைகள், குறிப்பேடுகள், மழையங்கிகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கொட்டன் தடிகளைகொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையிலேயே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் ரோந்து பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை பொலிஸ்மா அதிபரால் அனுப்பப்பட்டுள்ளது
Be First to Comment