சோசலிச இளைஞர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்..
Be First to Comment