முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெசாக் விடுமுறை தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படாமை துரதிர்ஷ்டவசமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்
ரஞ்சன் ராமநாயக்க ஒரு திருடனோ அல்லது ஒரு மோசடிக்காரனோ அல்ல. அவர் ஒரு மனிதாபிமானி. வெசாக் விடுமுறை தினத்தை முன்னிட்டு 240க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவில்லை.இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை.
திருடனோ,மோசடிக்காரனோ அல்லாத ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் மனிதாபிமானமுள்ள ஒரு தலைவர். அவருக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் முகமாக தான் போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment