முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது.
தமிழர்கள், சிங்களவர்கள், பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக கொழும்பில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வு பொது வெளியில் இதுவே முதற்தடவையாகும்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் ஆத்ம சாந்தி வேண்டியும்
அவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரியும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு,
வருடாவருடம் நினைவேந்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
Be First to Comment