யாழ்.சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் 37 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த ஏ.ரதீஸ்வரன் (வயது37) என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில் வட்டி வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தொியவருகின்றது.
சுமார் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சங்குவேலி பகுதி வழியாக தப்பிச் சென்றிருக்கின்றது.
இதன்போது அப்பகுதியில் கடமையில் இருந்த மானிப்பாய் பொலிஸார் கண்டும் காணாததுபோல் நின்றதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
Be First to Comment