கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன், மனைவி வைத்தியசாலையில்
By admin on May 19, 2022
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் 18.05.2022 நேற்றைய தினம் இரவு 1.00 மணியலவில் மூன்று கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
வீட்டில் இருந்த கணவன் மனைவி மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவரின் கை பகுதியில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி உலக்கையால் தாக்கப்பட்ட நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டிலிருந்த பல பொருட்களும் சேதப்படுத்தபட்டது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நிலையில் வீட்டிலிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அயலவர்கள் உடன் சம்பவயிடத்திற்கு சென்றுள்ளனர்.
காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment