கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் தெஹிவளை மாநகர சபையின் பெண் உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
53 வயதான இவர் ஹங்வெல்ல, தும்மோதர பிரதேசத்தை சேர்ந்தவர்.
இதேவேளை 59 வயதான தெஹிவளை மாநகர சபை பெண் உறுப்பினர் பொல்கஹவெல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நாளை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Be First to Comment