மூன்று தசாப்பதகாலம் நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து 13 ஆவது வருட நிறைவு நாளில் படையினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஆகியோர் சபையில் கூறினர்
பாராளுமன்றம் நேற்று (18)காலை 10 மணிக்கு கூடியது. இந்த நிலையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் , சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவும் படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், இன்று மிக முக்கியமான நாள், நாட்டில் மூன்று தசாப்தகாலம் நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து 13 ஆவது வருட நிறைவு நாள் மஹிந்த ராஜபக் ஷ தழைத்துவம் வழங்கிய காலத்திலேயே நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. அவரின் தலைமைத்துவமும் படையினரின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்கு காரணம். எனவே இன்றைய நாளில் படையினருக்கு எமது நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
இதேபோன்றே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட நாளில் அதற்காக தம்மை அர்ப்பணித்த படையினருக்கு நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவிப்பதாக கூறினார்.
Be First to Comment