கிழக்கு கடற்பரப்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 40 பேர் கைது
(திருக்கோவில் நிருபர்))
கிழக்கு கடற்பரப்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையிலும் திருகோணமலை கடற்பரப்பில் 19 பேர் உட்பட 40 பேரை கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கைது செய்துள்ளனர்.
கிழக்கு கடற்பரப்பு ஊடாகஅவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக றோலர் இயந்திர படகு ஒன்றை தயார் செய்து அதில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இருந்து 40 பேரை கொண்டு செல்வதற்கு ஆள்கடத்தல் காரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்
இந்த நிலையில் கிழக்கு கடற்பரப்பில் காத்திருந்த றோலர் இயந்திர படகில் கடற்கரையில் இருந்து சிறிய இயந்திர படகுகள் ஆட்களை கொண்டு சென்ற பின் அங்கிருந்து அவுஸ்ரோலியாவுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டு கடற்பரப்பில் றோலர் படகு சம்பவதினமான நேற்று இரவு காத்திருந்ததையடுத்து அங்கு மட்டு புதுக்குடியிருப்பில் இருந்து இயந்திர படகுகளில் அந்த றோலருக்கு படகிற்கு ஆட்களை கொண்டு சென்று ஏற்றியுள்ளனர்
இது தொடர்பாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனைநடவடிக்கையை மேற்கொண்ட போது இரு படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு தயாராகிய நிலையில் 4 பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தடன் இரு இயந்திர படகுகளை மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு கடற்பரப்பில் காத்திருந்த இயந்திர படகினை கடற்படையின் சுற்றிவளைத்து கைப்பற்றிய போது அதில் இருந்து மட்டக்களப்பை சேர்ந்த 7 பேர் உட்பட 19 பேரை கைது செய்ததுடன் கடலில் இருந்து றோலரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனா.;
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மன்னார் வவுணியா திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அவுஸ்ரோலியா செல்வதற்கு கட்டணமாக 5 இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளதாகவும் எனவும் சிலர் முகவர்களுக்கு 5 இலட்சம்ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் சிலர் அவுஸ்ரோலியா சென்றடைந்த பின்னர் பணம் வழங்குவதா இந்த சட்டவிரோத பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 21 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Be First to Comment