அமெரிக்காவில் அண்மைக்காலமாக பால் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
குறிப்பாக குழந்தைகளுக்கான பால்மாவினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பல குடும்பங்கள் திணறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பால் உற்பத்தி நிறுவனமொன்று தனது உற்பத்தியை நிறுத்தியமையே இத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் யூடாவில் வசிக்கும் அலிசா சிட்டி என்ற பெண் தன்னுடைய தாய்ப்பாலை விற்று, பல குழந்தைகளுக்கு பசியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் தனது தாய்ப்பாலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து தேவை ஏற்படும் போது விற்பனை செய்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment